ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' புத்தகத்தை வெளியிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

விருதுநகரில் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' புத்தகத்தை வெளியிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

விருதுநகரில்

விருதுநகரில் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' புத்தகத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டார்

Virudhunagar | விருதுநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

12.10.2022 அன்று மாலை 6 மணியளவில் விருதுநகர் வி.வி.எஸ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருதுநகர் கிளை சார்பாக எழுத்தாளர் ச.தமிழ் செல்வன் எழுதிய தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள் அனைவரையும் வரவேற்க, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நூலை வெளியிட்டார். இதனை வி.வி.எஸ் குழும தலைவர் வி.வி.எஸ்.யோகன் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விருதுநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

இதனைத்தொடர்ந்து பேசிய எழுத்தாளர்கள் தமிழ் சிறுகதைகளின் பெருமைகள் பற்றியும், எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதிய நூல் பற்றியும் பேசினர். மொத்தமாக 900 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 900 என நிர்ணயம் செய்யப்பட்டு, வெளியீட்டு விழாவில் நேரடியாக புக் செய்தவர்களுக்கு மட்டும் ரூபாய் 750க்கு வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar