ஹோம் /விருதுநகர் /

குட்டி ஜப்பானில் புத்தக திருவிழா... பொன்னியின் செல்வனுக்கு தனி மவுசு...

குட்டி ஜப்பானில் புத்தக திருவிழா... பொன்னியின் செல்வனுக்கு தனி மவுசு...

சிவகாசி

சிவகாசி புத்தக கண்காட்சி

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ஜேசிஐ சிவகாசி டைனமிக்,ரோட்டரி கிளப் ஆஃப் சிவகாசி டவுன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சிவகாசி திருத்தங்கள் ரோட்டில் உள்ள உலக மாதா கல்யாண மண்டபத்தில் சிவகாசி புத்தக திருவிழா 2022 என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சென்ற மாதம் 30ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி இம்மாதம் அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இக்கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இக்கண்காட்சியில் பொன்னியின் செல்வன், உடையார், பார்த்திபன் கனவு உட்பட வரலாற்று நாவல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

பாண்டிய மன்னன் வரலாறு, சேர சோழ வரலாறு, பல்லவ மன்னன் வரலாறு முதலான வரலாற்று நூல்களும், சிலப்பதிகாரம் மணிமேகலை முதலான காப்பியங்களும் , தலைவர்களின் வரலாற்று புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர குழந்தைகளை கவர ஜோக்ஸ், தெனாலிராமன் கதைகள் முதலான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கென புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாங்கும் புத்தகங்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து கண்காட்சியில் ஸ்டால் வைத்திருக்கும் விற்பனையாளர்கள் பேசுகையில், “சிவகாசியில் மூன்றாவது ஆண்டாக இந்த புத்தக கண்காட்சி நடத்தி வருகிறோம். தற்போது பொன்னியின் செல்வன் தாக்கத்தினால் மக்கள் அதிகளவில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி செல்கின்றனர்” என அவர்கள் தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar