ஹோம் /விருதுநகர் /

அழிவின் விளிம்பில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் - தொழிலாளிகளின் துயரம்..

அழிவின் விளிம்பில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் - தொழிலாளிகளின் துயரம்..

அழிவின்

அழிவின் விழிம்பில் சைக்கிள்கள்- வாழ்க்கை சக்கரம் சுழலுமா?

Virudhunagar District: நவநாகரீக பரிமாண வளர்ச்சி காரணமாக சைக்கிள் பயன்பாடு பொதுமக்களிடையே மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Virudhunagar | Virudhunagar

  விருதுநகர் மாவட்டம் முழுவதும் சைக்கிள் பயன்பாடு மெல்ல மெல்ல பொதுமக்களிடையே குறைந்து வருவதால் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நலிவடைந்து வரும் நிலையில் இத்தொழிலை மீட்டெடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  விருதுநகர் மாவட்டத்தில் பட்டிதொட்டி முதல் கிராமங்கள் வரை அனைத்து வீடுகளிலும் முக்கிய போக்குவரத்து சாதனமாக சைக்கிள் இருந்து வந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வந்தனர். அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட்டும் வந்தது.

  தற்போது நவநாகரீக பரிமாண வளர்ச்சி காரணமாக சைக்கிள் பயன்பாடு பொதுமக்களிடையே மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சைக்கிள் உதிரிபாக விற்பனையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

  அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 300க்கும் மேற்பட்ட சைக்கிள் பழுது நீக்கும் கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல குறைந்து வெறும் 39 சைக்கிள் பழுது பார்க்கும் நிலையங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது இருபது, முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

  இதுகுறித்து நம்மிடம் பேசிய சைக்கிள் பழுது நிற்கும் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் முருகன், கூறியதாவது, ‘அருப்புக்கோட்டை நகரில் சுமார் 40 வருடங்களாக சைக்கிள் பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என் சிறுவயது காலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சைக்கிள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைய தொடங்கி உள்ளது.

  இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். சைக்கிள் பயன்படுத்தும் வேகம் குறைய தொடங்கி பைக் மற்றும் காரில் மீது மக்களுக்கு மோகம் அதிகரித்துள்ளதால் சைக்கிளின் விலை மதிப்பு குறைய தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் வளரும் இளம் தலைமுறையினருக்கு சைக்கிள் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நலிவடைந்து வரும் சைக்கிள் பழுது நிற்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மானியம் வழங்கி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Virudhunagar