மலைகளுக்கு சென்று மலைத்தேன் எடுத்து விற்ற காலம் போய் இன்று ஆடு, மாடுகளை போல் தேனீப் பண்னைகள் அமைத்து தேன் எடுக்கும் காலம் வந்து விட்டது.மரங்களிலும் பாறை இடுக்குகளிலும் கூடுகட்டி வாழ்ந்து வரும் தேனீக்களை பெட்டிகளில் வளர்த்து அதில் வரும் தேனை எடுத்து பயன்படுத்துவதை தான் தற்போது தேனீ வளர்ப்பு என்கிறோம்.
பறவை வீடு போல பெட்டிகளை அமைத்து அதில் தேன் கூடு கட்ட ஏதுவாக சட்டங்களை அமைத்து, தேனீக்களை விட்டு வளர்த்து வருகின்றனர். தேனீக்களை அந்த பெட்டியில் தங்க வைக்க முதலில் அந்த தேனீக்களுக்கு இவர்களே உணவு கொடுக்கின்றனர்.
மொத்தமாக இரண்டு அறைகளை கொண்ட பெட்டியில் கீழ் அறையில் தேனீக்கள் தங்களின் இனத்தை பெருக்குவதற்கான முட்டைகளையும் அதற்கான உணவு பொருட்களையும் சேகரித்து வைக்கின்றன. மேற்பகுதியில் அவைகளின் எதிர்கால தேவைக்கான கேன்களை சேகரித்து வருகின்றன.
மேற்பகுதியில் உள்ள தேன்களை மட்டுமே எடுத்து பயன்படுத்த முடியும் என்கின்றனர் தேனீ வளர்ப்பவர்கள்.ஏனென்றால் கீழ் உள்ள தேன்களை தேனீக்களின் இனவிருத்திக்காக வைத்தால் மட்டுமே தேனீயால் தன் இனத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும். காரணம் ஒரு வேலைக்கார தேனீயின் வாழ்நாளே 80 நாட்கள் தான். அதன் பின்னரும் தேனீக்கள் மூலம் தேன் பெற வேண்டும் என்றால் அவைகளுக்கு கொஞ்சம் விட்டு வைக்க வேண்டும் என்கின்றனர்.
இதே தேனீப் பண்னைகளை விவசாய நிலங்களில் அமைத்தால் இரட்டிப்பு இலாபம் பெற முடியும் என்கிறார் விருதுநகரை சேர்ந்த தங்க முனிசாமி. அது என்னவென்றால் இயற்கையில் தேனீக்கள் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பயன்படுகின்றன.
வீட்டில் படமெடுத்து ஆடிய 5 அடி நல்ல பாம்பு.. அலறியடித்து ஓடிய குழந்தைகள்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி!
செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar