தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் கீழடி. இந்த கிராமத்தில் கிடைத்த அகழ்வாய்வு முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கீழடியில் தனி அருங்காட்சியகம் கட்டி அதை மக்கள் பார்வைக்கு திறந்து வைத்துள்ளனர்.
செட்டிநாடு கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் தமிழர்களின் உழவு, நீர் மேலாண்மையை, வணிகம், ஆடை அணிகலன்கள் மற்றும் வாழ்க்கை முறை என பல்வேறு பிரிவுகளில் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
இதை மக்கள் பலரும் நேரில் சென்று பார்த்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இனைந்து விருதுநகர் மக்களை ஒரு நாள் சுற்றுலாவாக கீழடி அருங்காட்சியகம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : விருதுநகர் பொருட்காட்சி தொடங்கியாச்சு.. ரெடியா மக்களே!
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாரம்தோறும் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மக்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாகவும், காலை 9 மணிக்கு புறப்படும் பேருந்து மாலை 5 மணிக்கு விருதுநகர் வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதில் மதிய உணவையும் சேர்த்து வழங்குவதாகவும் குறிப்பிட பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கீழடி அருங்காட்சியக சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர் 73977 15688 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar