Home /virudhunagar /

பாளையக்காரர்களை மிரட்டும் பாவாலி பட்டயம்..

பாளையக்காரர்களை மிரட்டும் பாவாலி பட்டயம்..

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News | விருதுநகருக்கு அருகில் உள்ள பாவாலி கிராமத்திலும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை உணர்த்தும் வகையில் தாமிர பட்டயம் ஒன்று இன்று ஊர் மத்தியில் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் வடுக்கள் நம்மை விட்டு இன்னும் நீங்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு செய்த கொடுமைகளுக்கும், அவர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு சான்றாக நிறைய கதைகளும், சான்றுகளும் காணப்படுகின்றன. நம் விருதுநகருக்கு அருகில் உள்ள பாவாலி கிராமத்திலும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை உணர்த்தும் வகையில் தாமிர பட்டயம் ஒன்று இன்று ஊர் மத்தியில் காணப்படுகிறது.

மேசர் பானர்மேன் செப்பேடு:

இந்த பட்டயம் பாளைக்காரர்களையும் பாளையப்பட்டுகளை சேர்ந்த மக்களையும் எச்சரிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
கட்டபொம்மனை தூக்கிலிட ஆனையிட்ட மேசர் பானர்மேன் ஜெனரல் கட்ட பொம்மனை தூக்கிலிட்ட பின்பு பாளையக்காரர்களின் அதிகாரத்தை ஒடுக்க நினைத்தார். இனி பிரிட்டிஷ் அரசாங்கம் மீது மக்களுக்கு பயம் இருக்க வேண்டும் என எண்ணி எச்சரிக்கும் வகையில் தாமிர பட்டயத்தை அடித்து அதை அனைத்து பாளையங்களிலும் ஊர் மத்தியில் பொதுமக்கள் பார்க்கும் படி வைக்க ஆனையிட்டார்.அதன்படி பாளையாமாக விளங்கிய பாவாலியிலும் பட்டயம் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:  விருதுநகரின் பெருமையை உலகுக்கு சுட்டி காட்டும் சுற்றுலாத் தலங்கள்

பட்டயம் கூறும் செய்தி:

1799 ல் வைக்கப்பட்டுள்ள இந்த பட்டயம் இனி யாதொரு பாளையகார்களும் கோட்டை, படைப்பிரிவு ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்றும் பொதுமக்கள் யாரேனும் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அதற்கும் பாளையக்காரர்களே பொறுப்பு என்றும் இதை மீறி செயல்படுவோர் கொலை செய்யப்படுவோர் என எச்சரிக்கிறது

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடக்கத்தில் பராமரிப்பு இன்றி கிடந்த இந்த பட்டயத்தை பின்னர் ஒரு பீடம் கட்டி இதனை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் பட்டயம் திறந்த வெளியில் மழையிலும் வெயிலிலும் இருப்பதால் 200 ஆண்டு வரலாற்று பொக்கிஷம் அழியும் அபாயம் உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி