ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நூல் விலை குறைந்ததால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.!

விருதுநகரில் நூல் விலை குறைந்ததால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.!

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar | ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை குறைந்து விற்பனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar | Tamil Nadu

விருதுநகர் மாவட்டத்தில் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் நூல் விலை சற்று குறைந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

சமீப காலமாக நூல் விலை திடீரென்று உயர்ந்து 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டர் எடுத்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க இயலாத நிலையில் கடுமையான நஷ்டத்தை பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

ஒரு மாத காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ALSO READ | 2022 தீபாவளிக்கு சிவகாசியில் அறிமுகமாகியுள்ள புதிய ரக பட்டாசுகள் என்னென்ன? விலை இவ்ளோதானா...!

கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு வரை ஒரு கேண்டி விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருந்து வந்த நிலைக்கு மீண்டும் விலை குறைய வேண்டும் என பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலை குறைந்து சர்வதேச சந்தையில் உயர்ந்த இடத்தை தொடர்ந்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யு மாறு பேண்டேஜ் உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Virudhunagar