முகப்பு /விருதுநகர் /

அருப்புக்கோட்டை பகுதியில் வீசும் துர்நாற்றம்.. முகம் சுளிக்கும் பொதுமக்கள்.. 

அருப்புக்கோட்டை பகுதியில் வீசும் துர்நாற்றம்.. முகம் சுளிக்கும் பொதுமக்கள்.. 

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பகுதியில் வீசும் துர்நாற்றம்

Virudhunagar News : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலம் அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பாலம் அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால்அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் மூக்கை பொத்திக்கொண்டு மக்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் கருமாதிமடம் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள அருப்புக்கோட்டை பாலத்தின் கீழ் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியானது மாசடைந்து காணப்படுகின்றது‌. மேலும் சாக்கடை கழிவுகளும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதன் அருகில் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் நிலையில், இப்படி குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக இப்பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது‌. இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் முகம் சுளித்தபடி கடந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது பற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை சேகரிக்காமல் இருப்பதே மக்கள் இப்படி குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கு காரணம் என்று கூறும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar