முகப்பு /விருதுநகர் /

அல்லம்பட்டி தரைப்பாலத்தில் உள்ள குப்பைகளால் துர்நாற்றம்.. நடவடிக்கை எடுக்குமா விருதுநகர் நகராட்சி?

அல்லம்பட்டி தரைப்பாலத்தில் உள்ள குப்பைகளால் துர்நாற்றம்.. நடவடிக்கை எடுக்குமா விருதுநகர் நகராட்சி?

X
தரைப்பாலத்தில்

தரைப்பாலத்தில் உள்ள குப்பை

Allampatti Railway Subway | விருதுநகர் அல்லம்பட்டி தரைப்பாலம் பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் அருப்புக்கோட்டை ரோட்டுக்கு செல்லும், காமராஜர் பை பாஸ் சாலை‌யில் குறுக்கே இரயில் பாதை இருப்பதால் அதை வாகன ஓட்டிகள் எளிதாக கடந்து செல்லும் வகையில் அங்கு ஒரு இரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பாதை மக்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த பாதையின் அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி மாசடைந்து காணப்படுவதோடு துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

தினசரி இதே இடத்திற்கு மக்கள் வந்து குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி வருவதும் நகராட்சி பணியாளர்கள் இங்கு வந்து குப்பைகளை அள்ளிச்செல்வதும் தினசரி வாடிக்கையாக நடந்து வரும் நிலையில், மக்கள் இங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அல்லம்பட்டி தரைப்பாலத்தில் உள்ள குப்பைகளால் துர்நாற்றம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் நகராட்சி பகுதியில் பல இடங்களில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் நிலையில், இதன் மூலம் விருதுநகர் நகராட்சியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    First published:

    Tags: Local News, Virudhunagar