ஹோம் /விருதுநகர் /

விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து விருதுநகரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர்

விருதுநகர்

Awareness in Virudhunagar | விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இந்திய அளவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் அதிக அளவில் நடபெறுகிறது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசுகளை விற்பனைக்காக கொண்டு செல்லும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு மீட்பு நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 508 பேர் பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பம் அளித்தனர். இவர்களில் 500 பேருக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருமண தடை நீங்க விருதுநகரில் வழிபடவேண்டிய முக்கிய கோவில்

விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மெயின் பஜார் போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மேலும், அனுமதி வழங்கப்பட்ட பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிவுரை வழங்கப்படுகிறது. பட்டாசுகளை வாகனங்களில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லும்போது தார்பாலின் கொண்டு மூடி கொண்டு செல்ல வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதில் டிரைவர், 2 உதவியாளர்கள் இருப்பதுடன் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். உரிய அலுவலர், போலீசாரின் அனுமதி பெறுவது அவசியம். வாகனத்தின் 4 பக்கங்களிலும் பட்டாசு அபாயம் என குறிப்பிட்டு கொண்டு செல்ல வேண்டும். மேலும் முதலுதவி பெட்டி, பாதுகாப்பு சாதனங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar