ஹோம் /விருதுநகர் /

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விருதுநகரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விருதுநகரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விருதுநகர்

விருதுநகர்

Deepavali 2022 | ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வரும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் குதுகலத்திற்கும் இனையாக ஆங்காங்கே விபத்துக்களும் நடந்தேறி வருகின்றன. இதற்கு முழுக்க முழுக்க காரணம் பட்டாசுகளை கவனக்குறைவாக கையாளுவதே.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து  பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது‌.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் இடையே ஆங்காங்கே பட்டாசுகள் வெடிப்பதால் தீ விபத்துக்களும் நடந்தேறி வருகின்றன. இதற்கு முழுக்க முழுக்க காரணம் பட்டாசுகளை கவனக்குறைவாக கையாளுவதே. இதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தீயணைப்பு சார்பில் விபத்தில்லா பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  விருதுநகர் செவன்த் டே மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை கையாளுவது குறித்த விழிப்புணர்வு விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் அழிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் பேசிய தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை எப்படி வெடிப்பது, பட்டாசு வெடிக்கும் போது தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது மேலும் எவ்வாறு தீ விபத்து குறித்து தகவல் அளிக்க தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்:

1. பட்டாசுகளை வெடிக்க எப்போதும் நீளமான ஊதுபத்திகளையே பயன்படுத்த வேண்டும், ஒரு போதும் தீப்பெட்டியை பயன்படுத்தி பட்டாசுகளை பத்த வைக்க கூடாது

2. பட்டாசு வெடிக்கும் போது முகத்தை வெடிக்கு அருகில் வைக்க கூடாது ஏனெனில் சில பட்டாசுகள் சட்டென்று வெடித்து முகம் காய பட வாய்ப்புகள் உள்ளது.

3. ஒரு முறை பற்ற வைத்த பின் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும் அதை மீண்டும் வெடிக்க முயற்சிக்க கூடாது

4. ராக்கெட் போன்ற வான வெடிகளை வெடிக்க திறந்த வெளி மைதானங்களையே பயன்படுத்த வேண்டும்.

5. பட்டாசுகளை வெடித்து முடித்த பின்னர் மறக்காமல் தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது போன்ற அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கினர். நிகழ்வின் முடிவில் பள்ளி முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவத்து நன்றியுரை வழங்கினார்.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Virudhunagar