முகப்பு /Virudhunagar /

விருதுநகர்: சிறப்பாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது

விருதுநகர்: சிறப்பாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது

விருது

விருது

Virudhunagar : பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விருதுநகர் விவசாயிகள் சிறப்பு பரிசு, ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிறப்பு பரிசு மற்றும் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு:-

தரிசு நிலங்களில் தோட்டக்கலைத் துறை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 2021 - 22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் முதல் பரிசாக ரூபாய் 15,000 இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரம் 3-ஆவது பரிசாக ரூ.5,000 தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.

மேலும், விருது மற்றும் ஊக்கத்தொகை பெற தகுதியான நபர்கள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் www.tnhorticulture.tn.gov.in என்ற முகவரியில் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

First published:

Tags: Virudhunagar