முகப்பு /விருதுநகர் /

அனல் பறந்த ஆவியூர் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்!

அனல் பறந்த ஆவியூர் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்!

X
ஆவியூர்

ஆவியூர் ஜல்லிக்கட்டு

Aviyur Jallikattu | விருதுநகர் மாவட்டம் ஆவியூர் ஜல்லிக்கட்டில் தென்மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமம் ஆவியூர். இங்கு உள்ள அழகிய பெருமாள் கோயில் மற்றும் பெரிய கருப்பண்ணசாமி கோவிலுடைய மாசி களரி திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு சில தினங்களுக்கு முன்பு நடைபெற இருந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது  நிறுத்தப்பட்டது. இதனால் போட்டிக்கு வந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஆவியூர் ஜல்லிக்கட்டு இன்று மீண்டும் நடத்தப்பட்டது. இதில், தென் மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் அதிகமான காளைகள் பங்கு பெற்ற நிலையில், காளையர்கள் 25 பேர் வீதம் சுழற்சி முறையில் மாடு பிடிக்க வாடி வாசலுக்குள் அனுப்பப்பட்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள், காளையர்களுக்கு போக்கு காட்டி தங்களின் வீரத்தை நிரூபித்தன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, மிக்ஸி, குத்து விளக்கு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசு பொருட்களின் மதிப்பு மற்றும் காளைகளின் பராமரிப்பு செலவு இரண்டையும் ஒப்பிட்டு பார்த்த போது பராமரிப்பு செலவுதான் அதிகமாக இருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது பற்றி பேசிய வத்திராயிருப்பை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஒருவர், வண்டி வாடகை, சாப்பாடு செலவு என ரூ.10,000  செலவு செய்திருக்கிறேன். இதெல்லாம் இந்த பரிசுக்காகவா இல்லவே இல்லை, எல்லாம் ஒரு பெருமைக்காக. நம்ம காளை களத்துல விளையாடுற பாக்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும் என்றார். காலையில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Virudhunagar