ஹோம் /விருதுநகர் /

அருப்புக்கோட்டையில் வெள்ளை மாளிகை பொருட்காட்சி.. அடேங்கப்பா இங்க இவ்ளோ இருக்கா?

அருப்புக்கோட்டையில் வெள்ளை மாளிகை பொருட்காட்சி.. அடேங்கப்பா இங்க இவ்ளோ இருக்கா?

அருப்புக்கோட்டையில்

அருப்புக்கோட்டையில் வெள்ளை மாளிகை பொருட்காட்சி..

Arupukkottai White House Fair 2022 : பண்டிகை நாட்களை முன்னிட்டு அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில் ‘வெள்ளை மாளிகை’ பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்க என்னவெல்லாம் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

பண்டிகை நாட்களை முன்னிட்டு அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில் பொருள் காட்சி நடைபெற்று வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளை மாளிகை பொருட்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்சமயம் பண்டிகை நாட்கள் என்பதால் மக்களும் குடும்பத்தோடு சென்று  கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

வெள்ளை மாளிகை:

மைதானத்தின் முகப்பிலேயே பிரமாண்டமான முறையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செட் அமைத்துள்ளனர். வெள்ளை மாளிகையின் முகப்பில் டிக்கெட் (நபர் ஒருவருக்கு 30) பெற்றுக்கொண்டு மாளிகைக்குள் நுழைவது போல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

அருப்புக்கோட்டையில் வெள்ளை மாளிகை பொருட்காட்சி

செல்ஃபி பாயிண்ட் கள்:

செல்ஃபி எடுத்து வாட்ஸ்ஆப் டிபி வைக்க துடிப்பவர்களுக்கென நிறைய முப்பரிமாண செல்ஃபி பாயிண்ட்களை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க:  ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

மணல் சிற்பங்கள்:

ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைக்கும் மணற்சிற்பங்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம் ஆனால் தற்போது அத்தகைய மணற்சிற்பங்களை நம் அருப்புக்கோட்டையில் கானும் வகையில் அப்துல் கலாம், குந்தவை நாச்சியாரின் மணற்சிற்பங்களை வைத்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அருப்புக்கோட்டையில் வெள்ளை மாளிகை பொருட்காட்சி

மரணக்கிணறு:

மரணக்கிணறு என்ற பெயரில் நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்தரத்தில் பைக் மற்றும் கார்களை ஓட்டி நம்மை பிரமிக்க வைக்கின்றனர். சிறுவயதில் சர்கஸில் பார்த்த பைக் சாகசங்களை மீண்டும் பார்க்க முடிந்தது என்று பார்வையாளர்கள் நெகிழ்ந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவை தவிர சிறுவர்களுக்கென நிறைய விளையாட்டுகள், பெரியவர்களுக்கென ராட்டினம் போன்ற விளையாட்டுகளும், கடைகளும் உள்ளன. விடுமுறை நாட்களில் வெகுதூரம் செல்லாமல் அருகிலே குடும்பத்தோடு சற்று நேரம் கழித்து வர வேண்டும் என்பவர்கள் விடுமுறை நாட்களில் அருப்புக்கோட்டை வெள்ளை மாளிகை பொருள் காட்சிக்கு ஒரு ரவுண்டு போய் வரலாம்

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar