ஹோம் /விருதுநகர் /

ஆடு மாடு வளர்க்கிறீங்களா? இனி இதை செய்ய கூடாது.. அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!

ஆடு மாடு வளர்க்கிறீங்களா? இனி இதை செய்ய கூடாது.. அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!

ஆடு மாடு வளர்ப்போருக்கு அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!!!

ஆடு மாடு வளர்ப்போருக்கு அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!!!

aruppukkottai | அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Aruppukkottai | Virudhunagar

ஆடு மாடு வளர்போர் அதை முறையாக பராமரிக்காமல், சாலைகளில் அலைய விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை ஒன்று பிறப்பித்துள்ளது.

நகர் பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து அதிகமாக உள்ள சுழலில் கால்நடைகள் கவனிப்பின்றி சாலையில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதனால் ஆடு, மாடு பன்றி போன்ற கால்நடைகள் வளர்ப்போர் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை ஒன்று பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் நகராட்சி பகுதியில் ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்போர் அதை அவரவர் வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும்,மீறி சாலைகளில் சுற்றி திரிய விட்டால் பொது சுகாதார விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும் என்றும், அதையும் மீறி அடுத்த முறையும் கால்நடைகளை அலைய விட்டால் அவற்றை பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்தில் ஒப்படைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Aruppukkottai Constituency, Cow, Local News, Virudhunagar