ஹோம் /விருதுநகர் /

பொங்கல் பண்டிகை - சிவகாசியில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் ஏற்பாடு

பொங்கல் பண்டிகை - சிவகாசியில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் ஏற்பாடு

பொங்கல் பண்டிகை - சிவகாசியில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கம்

பொங்கல் பண்டிகை - சிவகாசியில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கம்

Virudhunagar District | பொங்கல் பண்டிகையையொட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

பொங்கல் பண்டிகையையொட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாட்டின்பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகிறார். இதேபோல இந்த பகுதியில் உள்ள கல்லூரிகளில் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிவகாசியில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், சிவகாசியில் இருந்து முக்கிய நகரங்களான சென்னை, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்து கழகம் அறிவித்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி சிவகாசியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 5 பேருந்துகளும், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு தலா 1 சிறப்பு பேருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், தேவைப்பட்டால் பிற ஊர்களுக்கும் உடனடியாக பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பேருந்துகள், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Must Read : 5 மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து போற்றும் ஆங்கிலேயர் பென்னிகுவிக்! - யார் இவர்?

இந்த சிறப்பு பேருந்துகள் சிவகாசியில் இருந்து இன்று முதல் 14ஆம் தேதி வரையிலும், சென்னை, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சொந்தஊருக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Special buses, Virudhunagar