தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது பொதுமக்கள் அதை வியப்புடன் பார்த்தனர்.
சமீபத்திய சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் அதிகம் பேசப்பட்ட ஒரு வார்த்தை அரிசிக்கொம்பன். ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையே அலர விட்ட காட்டு யானை தான் இந்த அரிசி கொம்பன். தமிழக வனத்துறைக்கு தண்ணி காட்டி வந்த இந்த யானையை கடந்த ஜூன் 5 ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன் பின்னர் யானை மீண்டும் வராமல் இருக்க தொலைவில் உள்ள திருநெல்வேலி களக்காடு வனப்பகுதியில் விட திட்டமிட்டு வனத்துறையினர் அதற்கான பணியில் இறங்கினர்.
இதற்கென பிரத்தியேக வாகனங்கள் மற்றும் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பின்னர் அரிசிக்கொம்பனை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். தேனி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அந்த வாகனம், திருநெல்வேலி செல்வதற்காக ஜூன் 6 ம் தேதி விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை வந்தது.
அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வாகனம் வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த மக்கள் வாகனத்தில் அரை மயக்கத்தில் இருந்த அரிசிக்கொம்பனை வியப்போடு பார்த்தனர் . மக்கள் கூடுவதற்கு சற்றும் இடம் தராமல் அந்த வாகனம் உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar