முகப்பு /விருதுநகர் /

அருப்புக்கோட்டை சமத்துவபுரத்தில் வீடு வேண்டுமா? விண்ணப்பிக்க ஏப்.5-ம் தேதியே கடைசிநாள்!

அருப்புக்கோட்டை சமத்துவபுரத்தில் வீடு வேண்டுமா? விண்ணப்பிக்க ஏப்.5-ம் தேதியே கடைசிநாள்!

அருப்புகோட்டை சமத்துவபுரம்

அருப்புகோட்டை சமத்துவபுரம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியார் சமத்துவபுரத்தில், இதர பிரிவில் உள்ள 10 வீடுகளுக்கு பயனாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் இதர பிரிவில் உள்ள 10 வீடுகளுக்கு பயனாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட அருணாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் காலியாக உள்ள இதர பிரிவினருக்கான 10 வீடுகளுக்கு பயனாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

யார் விண்ணப்பிக்கலாம்?

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அருணாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் சமத்துவபுரத்தின் எல்லையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இதர பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

top videos

    மேலும்,விருப்பம் உள்ளவர்கள் அலுவலக வேலை நாட்களில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் குடும்ப அட்டை, ஆதார், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் நேரில் சென்று 05.04.23 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Virudhunagar