சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி விருதுநகரில் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் பழங்கால பொருட்களை பெருமளவு காட்சிப்படுத்திய நபர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருதுநகரில் அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் இக்கண்காட்சியில் சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் பழங்காலத்தில் தயாரிக்கப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன மரங்கள் அனைத்தும் கரண்ட் இல்லாத காலத்தில் செதுக்கப்பட்ட தாகம் இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மர்மங்களுக்கு பாலிஷ் போட்டு பராமரித்து வருகிறார். இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் அதேபோல பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கடிகாரங்கள் ரேடியோ பரமபத கட்டை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்திய பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே அருங்காட்சியக தினத்தையொட்டி ஓவிய போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோல் பழங்கால பொருட்களை சேகரித்து காட்சிப்படுத்திய சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் என்பவருக்கு முதல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் இரண்டு மூன்று இடங்களை பிடித்த அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பழங்கால கண்காட்சியை உள்ளூர் வெளியூர் பள்ளி கல்லூரி மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.