ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்

போதைப் பொருள் ஒழிப்பு பேரணி

Virudhuanagar | விருதுநகரில் போதைப் பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் போதைப் பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் கூரைகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் போதைப் பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தார்.

போதைப் பொருள் தடுப்பு பேரணி

இந்த நிலையில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் வருகை தந்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பின்பு போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். காலை பத்து மணியளவில் அல்லம்பட்டி காமராஜர் சிலை அருகே தொடங்கிய பேரணி அனுமன் நகர், ஆர் எஸ் நகர் வழியாக வந்து வாட்டர் டேங்க் பகுதியில் முடிவடைந்தது.

போதைப் பொருள் தடுப்பு பேரணி

ஊர்வலத்தில் அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு கோஷமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வின் முடிவில் பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar