முகப்பு /விருதுநகர் /

சிவகாசியில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

சிவகாசியில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar News : ஏ.என்.டி அறக்கட்டளையின் 30வது மருத்துவ முகாம் சிவகாசியில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட கணிணி விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

  • Last Updated :
  • Virudhunagar, India

மே தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று கொண்டனர்.

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஏ.என்.டி அறக்கட்டளையினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பொதுமக்களுக்கு அவ்வப்போது மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏ.என்.டி அறக்கட்டளையின் 30வது மருத்துவ முகாம் சிவகாசியில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட கணிணி விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடந்த மே 14 ம் தேதி சிவகாசியில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமிற்கு பொது மருத்துவம், இருதயம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம் போன்ற பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பொதுமக்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Sivakasi, Virudhunagar