ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் விவசாயிகளின் குறைகளை தீர்க்க இலவச சேவை எண்கள் அறிவிப்பு

விருதுநகர் விவசாயிகளின் குறைகளை தீர்க்க இலவச சேவை எண்கள் அறிவிப்பு

விருதுநகர்

விருதுநகர்

Announcement of Toll Free Service Numbers To Resolve The Grievances of Virudhunagar Farmers | விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாட்ஸ் ஆப் மூலம் விவசாயம் மற்றும் சேவைகள் தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கும் விதமாக சேவை மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாட்ஸ் ஆப் மூலம் விவசாயம் மற்றும் சேவைகள் தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கும் விதமாக சேவை மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி நிர்வர்த்தி செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க ; 100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு 2022-23ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் கீழ் இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் புலனம் (வாட்ஸ்ஆப்) சேவை பெறப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள், வினாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 1800 425 1907 என்ற இலவச கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சேவையானது, விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னனு தேசிய வேளாண் சந்தை, முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு, சிறப்பு வணிக வளாகங்கள் தொடர்பான கேள்விகள், புகார்கள், கருத்துக்கள் ஆகியவற்றை 7200818155 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar