ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நாளைய மின்தடை பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

விருதுநகரில் நாளைய மின்தடை பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

மின் தடை

மின் தடை

Virudhunagar news: விருதுநகர் மாவட்டத்தில்  புதன் கிழமை (நவம்பர் 23) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

    விருதுநகர் அருகே ஜி.என்.பட்டி மின்நிலையத்தில் ஆனைக்குட்டம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை ( 23-11-2022)  மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

    இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய நிர்வாக இன்ஜினியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். முத்துலாபுரம், காரிசேரி, பெத்துசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local News, Powercut, Virudhunagar