முகப்பு /விருதுநகர் /

Virudhunagar | விருதுநகரில் நாளை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?

Virudhunagar | விருதுநகரில் நாளை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?

விருதுநகரில் மின்தடை

விருதுநகரில் மின்தடை

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சவுத் மில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்றுமின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்குஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | Virudhunagar | மிலிட்ரியில் சேரணும்.. சயிண்ட்டிஸ்ட் ஆகணும்... பெருங் கனவுகளை சுமந்து நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள்

இதையடுத்து, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும்இடங்கள்:

நத்தம்பட்டி, நத்தம்பட்டி காலனி, கிருஷ்ணாபுரம், அம்மன் கோவில்பட்டி, கம்மாபட்டி, வரகுண ராமபுரம், மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

First published:

Tags: Power Shutdown, Virudhunagar