முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் தன்னார்வ அமைப்பினருடன் சேர்ந்து மரக்கன்று நட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

விருதுநகரில் தன்னார்வ அமைப்பினருடன் சேர்ந்து மரக்கன்று நட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

X
மரம்

மரம் நட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Virudhunagar District | விருதுநகரில் ஆலமரம் அமைப்பின் 108வது வார மரம் நடும் நிகழ்வில் ஆலமரம் அமைப்பினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் ஆலமரம் அமைப்பின் 108வது வார மரம் நடும் நிகழ்வில் ஆலமரம் அமைப்பினர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஆலமரம் அமைப்பினர் ஒவ்வொரு வாரமும் விருதுநகரில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆலமரம் அமைப்பின் 108வது வார மரம் நடும் நிகழ்வை முன்னிட்டு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களோடு சேர்ந்து மரம் நட முடிவு செய்தனர்‌.

இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆலமரம் அமைப்பினர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து, 108 மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் விருதுநகர் நகராட்சித் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர் மாதவனும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

முன்னதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ஆலமரம் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

top videos

    இது பற்றி பேசிய ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், ஒவ்வொரு வாரமும் இடைவெளி இன்றி மரக்கன்றுகளை நடும் பணியை செய்து வருவதாகவும், அந்த வகையில் 108 வது வாரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து 108 மரக்கன்றுகளை நடலாம் என ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்து அதை செய்து முடித்துள்ளதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar