ஹோம் /விருதுநகர் /

அமரர் ஆகிப்போன அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் அமரர் ஊர்தி..

அமரர் ஆகிப்போன அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் அமரர் ஊர்தி..

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனம் பழுதாகி நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனம் பழுதாகி நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் அருப்புக்கோட்டை வட்டார அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால் இங்கு ஏராளமான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு செயல்பட்டு வந்த இலவச அமரர் ஊர்தி வாகனம் பழுதாகி விட்டதாகவும், சரி செய்ய செட்டிற்கு சென்ற வாகனம் சரி செய்யப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் சில காலம் அமரர் ஊர்தி சேவை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவதாகவும், அவர்கள் தான் இதை கவனித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட இணை மருத்துவ இயக்குநரிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.

இதுதொடர்பாக இலவச அமரர் ஊர்தி சேவையின் புகார் எண் 155377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டபோது தற்போது அந்த வாகனத்திற்கு மாற்றமாக முதுகுளத்தூர் வாகனத்தை பயன்படுத்தி வருவதாகவும், அருப்புக்கோட்டை மருத்துவமனை வாகனம் செட்டில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாற்று வாகனத்தை ஏற்படுத்தி கொடுத்த போதிலும், ஒரு வாகனத்தை சரி செய்ய ஒரு மாத காலமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அரசு துறையினர் மக்கள் சேவையில் எவ்வளவு ஈடுபாடு காட்டுகின்றனர் என சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar