Home /virudhunagar /

கவனிக்குமா விருதுநகர் நகராட்சி? அல்லம்பட்டி ரயில்வே தரைப்பால சாலையில் கழிவுநீர் தேங்கும் அவலம்..

கவனிக்குமா விருதுநகர் நகராட்சி? அல்லம்பட்டி ரயில்வே தரைப்பால சாலையில் கழிவுநீர் தேங்கும் அவலம்..

விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டி ரயில்வே தரைப்பால சாலை

Virudhunagar District News | விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட முத்துராமன்பட்டி மற்றும் கூரைகுண்டு பஞ்சாயத்திற்குட்பட்ட அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் நகருக்குள் சென்று வர இந்த ரயில்வே தரைப்பால சாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் அல்லம்பட்டி ரயில்வே தரைப்பாலம் சாலையில் பாதாளச்சாக்கடை மூடிகள் உடைந்துள்ளதால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரகேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    விருதுநகர் நகராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அவை  சேதமடைந்து வருகின்றன.

    விருதுநகர் அல்லம்பட்டி ரயில்வே தரைப்பாலம் சாலையில் உள்ள மூன்று பாதாளச்சாக்கடை மூடிகள் கடந்த ஒரு மாதமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் சாலையில் தேங்கியபடி காணப்படுகிறது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    நகராட்சிக்குட்பட்ட முத்துராமன்பட்டி மற்றும் கூரைகுண்டு பஞ்சாயத்திற்குட்பட்ட அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் நகருக்குள் சென்று வர இந்த சாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் விரைவில் இதை சரி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி