முகப்பு /விருதுநகர் /

சைக்கிள் ரிக்ஷாவில் ஆல் இந்தியா டூர்.. விருதுநகர் வந்தடைந்தார் பீகார் முதியவர்..

சைக்கிள் ரிக்ஷாவில் ஆல் இந்தியா டூர்.. விருதுநகர் வந்தடைந்தார் பீகார் முதியவர்..

X
விருதுநகர்

விருதுநகர் வந்தடைந்தார் பீகார் முதியவர்

Virudhunagar News : போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் சைக்கிள் ரிக்ஷா பயணம் செய்து வரும் பீகார் முதியவர் விருதுநகர் வந்தடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் சைக்கிள் ரிக்ஷா பயணம் செய்து வரும் பீகார் முதியவர் விருதுநகர் வந்தடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 23ம் தேதியன்று தேசிய நெடுஞ்சாலையில், தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி கட்டப்பட்ட ஒரு சைக்கிள் ரிக்ஷாவை பார்க்க நேர்ந்தது. அந்த சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டி வந்த முதியவரிடம் பேசியபோது அவருக்கு தமிழ் தெரியவில்லை. இருந்தாலும் தனக்கு தெரிந்த மொழியில் பேச தொடங்கினார்.

அதில் பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தை சேர்ந்த தனாய் ஷா(58), என்பதும், இவர் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் ட்ரை சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து வருவதும் தெரியவந்தது. இதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த மாநிலமான பீகாரில் தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழகம் வந்துள்ளார்.

அவரிடம் பேசியபோது, கடந்த 4 மாதங்களாக சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து பீகார், உ.பி ஹரியானா, காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக வந்து தற்போது தமிழகம் வந்துள்ளதாகவும், இனி இங்கிருந்து அசாம் சென்று அங்கு தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

இதெல்லாம் போதைப்பொருளுக்கு அடிமையாகி விட கூடாது என்பதற்காக, அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

First published:

Tags: Local News, Virudhunagar