ஹோம் /விருதுநகர் /

சிவகாசி சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்

சிவகாசி சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்

X
சிறுகுளம்

சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள்

Virudhunagar District News : சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காரநேசன் காலனி பகுதியில் அமைந்துள்ளது சிறு குளம் கண்மாய். சிவகாசி, சாட்சியாபுரம், ரயில்வே காலனி பகுதியில் பெய்யும் மழைநீரானது இந்த சிறு குளம் கண்மாய்க்கு வந்து தேங்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் கண்மாயானது தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில், இந்த பெய்த மழையின் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு பின் சிறுகுளம் கண்மாய் நிரம்பியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தினர் கண்மாயில் கழிவுநீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கண்மாயில் நடைமேடையுடன் பூங்கா அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

கண்மாய் முழுவதும் நீர் நிறைந்து காணப்பட்டாலும் நீர் பரப்பு தெரியாத அளவு கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

15 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிரம்பியதாக கூறப்படும் நிலையில், இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்து காணப்படுகிறது. இதனிடையே நீர்நிலையை ஆகாய தாமரைகள் ஆக்கிமித்துள்ளதால் கண்மாயானது மாசடைந்து காணப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பூங்கா அமைப்பதற்கு முன்பு கண்மாயில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி கண்மாயை தூய்மை படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar