ஹோம் /விருதுநகர் /

"சேவை செய்ய வயது ஒரு தடையல்ல".. பென்ஷனில் முதியோர் இல்லம் நடத்தி வரும் தாத்தா!

"சேவை செய்ய வயது ஒரு தடையல்ல".. பென்ஷனில் முதியோர் இல்லம் நடத்தி வரும் தாத்தா!

சேவை செய்ய வயது ஒரு தடையல்ல

"சேவை செய்ய வயது ஒரு தடையல்ல" ஓய்வூதியத்தில் முதியோர் இல்லம் நடந்தி வரும் தாத்தா

பிரிட்டீஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, காஷ்மீரில் நடைபெற்ற போரில் குண்டுகளை தன் நெஞ்சில் வாங்கி, அதோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

சாதிக்கவும், சேவை செய்யவும் வயது ஒரு தடையா ? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் எதையும் செய்யலாம். இதற்கு சிறந்த உதாரணமாய் இருந்து வருகிறார் விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 94 வயதான திருப்பதி தாத்தா.

முன்னாள் ராணுவ வீரர்:

இவர் தன்னுடைய இளமை காலத்தில் பிரிட்டீஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, காஷ்மீரில் நடைபெற்ற போரில் குண்டுகளை தன் நெஞ்சில் வாங்கி, அதோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். தற்போது 94 வயதாகும் இவர் கடந்த 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டி கிராமத்தில் தன்னை போன்ற முதியோர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இது பற்றி அவரிடம் பேசிய போது, ராணுவத்தில் இருந்தபோது குண்டு காயம் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறி படித்து தேர்வெழுதி கமர்சியல் டேக்ஸ் ஆபிஸராக பணியாற்றினேன். எனக்கு 7 பிள்ளைங்க இருக்காங்க மனைவி இறந்தபின்பு என்னை கவனிக்க ஆள் இல்லாமல் போது. நண்பனின் ஆலோசனைப்படி வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் முதியோர் இல்லத்தில் சேர முடிவு செய்தேன். என்னுடைய சமுதாயத்தை காரணம் காட்டி எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  அன்று அனைத்து சாதி முதியோர்களும் வந்து தங்கும் வகையில் நாம் ஒரு முதியோர் இல்லம் தொடங்கலாம் என முடிவு செய்தேன்.  தற்போது இருக்கும் இல்லத்தை 25 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இன்றி நடத்தி வருகிறேன் என்றார்.

Also Read:   மிலிட்ரியில் சேரணும்.. சயிண்ட்டிஸ்ட் ஆகணும்... பெருங் கனவுகளை சுமந்து நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள்

பேருந்து நிறுத்தம் வேண்டும்:

எனக்கு இருப்பது எல்லாம் ஒரேயொரு கோரிக்கை தான் இந்த முதியோர் இல்லம் முன்பு பேருந்து நிறுத்தம் வேண்டும். ஏனென்றால் வயதாகி விட்டதால் இங்கிருக்கும் முதியோர் பேருந்து நிலையம் செல்ல சிரமமாக உள்ளது. இது தொடர்பாக பல முறை விண்ணப்பித்தும் பலனில்லை யாராவது இதற்கு உதவி செய்தால் அது போதும் மற்றபடி முதியோர் இல்லத்தை தனக்கு வரும் ஓய்வூதியத்தை கொண்டே நடத்த இயலும் என்றார்.

தற்போது இந்த இல்லத்தில் பத்து முதியோர்கள் தங்கியிருக்கும் சுழலில், அங்கேயே தங்கி அவர்களுக்காக சமைத்து வரும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நிம்மி பாட்டி தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாகவும், அன்று முதல் தற்போது வரை இந்த இல்லம் தான் தனக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

எப்போதும் தனிமையில் இருக்கும் தங்களுக்கு இது போன்று யாராவது வந்து தங்களிடம் பேசுவது ஆறுதலாக உள்ளது என்று கண்ணீருடன் தெரிவித்தார். முதியோர்களை தவிக்க விடாமல் அவர்களை பேணி காக்க வேண்டும் என்ற எண்ணம் இனியாவது மேலோங்க வேண்டும் என்று தான் தோன்றியது.

Published by:Ramprasath H
First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar