ஹோம் /விருதுநகர் /

லைலா கம்பேக் சூப்பர்.. கார்த்தியின் சர்தார் படத்துக்கு விருதுநகர்வாசிகள் தரும் ரேட்டிங் இது தான்..!!

லைலா கம்பேக் சூப்பர்.. கார்த்தியின் சர்தார் படத்துக்கு விருதுநகர்வாசிகள் தரும் ரேட்டிங் இது தான்..!!

கார்த்தியின்

கார்த்தியின் சர்தார்

Karthi Sardar Movie | பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான படம் என்பதால் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தாண்டு பொன்னியின் செல்வன், விருமன் படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் மூன்றாவது படமாக தீபாவளிக்கு வெளியாகி உள்ளது சர்தார்.  இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இப்படத்தை இயக்கி உள்ளார். கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உடன் ராஷி கண்ணா, ரஷிசா விஜயன் , முனீஸ்காந்த் , லைலா முதலானோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான படம் என்பதால் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் விருதுநகரில் உள்ள அமிர்தராஜ் திரையரங்கத்தில் படம் இன்று வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் படம் நன்றாக உள்ளது என்றும், லைலா கார்த்தி உள்ளிட்டோர் நடிப்பு பேசும்படி யாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

கார்த்தியின் சர்தார்

படத்தில் மெசேஜ்:

நாடு முழுவதும் நடக்கும் தண்ணீர் அரசியலை வைத்து பாட்டில் குடிநீரால் ஏற்படும் விளைவுகளை பற்றி சமூக கருத்தாக கூறியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன், விருமன் படங்களை போல இந்த படமும் மாபெரும் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை வருகின்ற  தீபாவளி விடுமுறை நாட்களை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Actor Karthi, Local News, Virudhunagar