முகப்பு /விருதுநகர் /

என்னது தெலுங்கு படமா? வாத்தி மூலம் மக்கள் மனதில் ரைடு வருவாரா தனுஷ்? விருதுநகர்வாசிகளின் ரிவ்யூ..

என்னது தெலுங்கு படமா? வாத்தி மூலம் மக்கள் மனதில் ரைடு வருவாரா தனுஷ்? விருதுநகர்வாசிகளின் ரிவ்யூ..

X
வாத்தி

வாத்தி படம் குறித்து விருதுநகர் ரசிகர்களின் கருத்து

Vaathi Movie Review | நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் குறித்து விருதுநகர் ரசிகர்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவான படம் வாத்தி. இப்படத்திற்கு மெலோடி அரசன் ஜீ.வி பிரகாஷ் இசையமைக்க சிதாரா என்டர்டெயின்மென்ட், போர்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இனைந்து தயாரித்துள்ளன. அசுரன் திரைப்படத்திற்கு பின்னர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தனுஷ் நடிப்பில் உருவான படம் என்பதாலும், தனுஷ் இதில் முதல் முறையாக ஆசிரியராக நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அந்த எதிர்பார்ப்பை தனுஷ் பூர்த்தி செய்துள்ளார் என்பதை உறுதி செய்யும் வகையில் படத்தின் விமர்சனங்கள் அமைந்துள்ளன.

முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம் என்றும் நடிப்பின் அசுரன் இதில் ஆசிரியராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற படிப்பு சார்ந்த படத்தை தனுஷ் பல ஆண்டுகளுக்கு முன்பே நடித்திருந்தால் அப்பவே ஒழுங்கா படிச்சு நல்ல நிலைக்கு போயிருப்பேன் என்று புலம்பிய படி சென்ற ரசிகர் ஒருவரின் கருத்து தான் கவனம் பெற்றது. கல்வியை வியாபாரமாக்கி அதை சுற்றி நடக்கும் அரசியலை வைத்து உருவாகியுள்ள வாத்தி மக்கள் மனதில் ரைடு வருவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Actor Dhanush, Local News, Virudhunagar