Home /virudhunagar /

1,000 ஆண்டுகள் பழமையான விருதுநகர் சிவன் கோவில் திருத்தேரோட்டம்.. கோலாகலமாக நடைபெற்ற ஆவணி பெருந்திருவிழா..

1,000 ஆண்டுகள் பழமையான விருதுநகர் சிவன் கோவில் திருத்தேரோட்டம்.. கோலாகலமாக நடைபெற்ற ஆவணி பெருந்திருவிழா..

பழமையான

பழமையான விருதுநகர் சிவன் கோவிலில் ஆவணி தேரோட்டம்..

Virudhunagar Sivan Kovil | விருதுநகர் மேல ரத வீதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமையான மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இங்கு ஆவனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

விருதுநகர் மேல ரத வீதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இங்கு ஆவணி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் இறைவனும் இறைவியும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர்.


இந்நிலையில் 06.09.2022 அன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மற்றுமொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்  செப் 7ம் தேதி அன்று நடைபெற்றது.
காலை 10மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது நகர் வலம் வந்து பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் கோவில் வந்தடைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சொக்கநாதரும் மீனாட்சியும் தேரில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என நாமம் பாடி வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
புகழ்பெற்ற சிவன் கோயில் திருவிழா இன்று நடைபெற உள்ள உற்சவ சாந்தியோடு நிறைவு பெற உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி