ஹோம் /விருதுநகர் /

கந்தக பூமியான விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்து அசத்தும் இளைஞர்!

கந்தக பூமியான விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்து அசத்தும் இளைஞர்!

X
விருதுநகரில்

விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்யும் இளைஞர்

Virudhunagar | கந்தக பூமியான நமது விருதுநகரில் ட்ராகன் ப்ரூட் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் அமர்நாத். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்த குளம் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் ட்ராகன் ப்ரூட் விவசாயம் செய்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

ட்ராகன் ஃப்ரூட் இந்த வார்த்தையை சமீபத்திய நாட்களில் பழக்கடைகளில் அதிகம் கேட்க முடிகிறது. சுவை மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மெக்சிக்கோவை பூர்வீகமாக கொண்ட இந்த பழங்கள் தற்போது தென்காசியாவிலும் வந்துவிட்டன.

ஏனெனில் இது வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் ஒரு சப்பாத்தி கள்ளி வகையை சேர்ந்த தாவரம்.இந்தியாவின் காலநிலையும் கிட்டத்தட்ட இதற்கு ஒத்து வருவதால் இங்கேயும் இதை தற்போது சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர்.

அதிலும் தமிழ்நாட்டில் தற்போது இந்த ட்ராகன்   ஃப்ரூட் விவசாயம் பற்றி பரவலாக பேச தொடங்கி உள்ள நிலையில், கந்தக பூமியான நமது விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் அமர்நாத். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்த குளம் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

மானாவாரி பயிர்களை மட்டும் சாகுபடி செய்து வரும் விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் ஐடியா எப்படி வந்தது என கேட்ட போது அவர் கூறியதாவது, “ஒரு முறை கம்போடியா சென்றிருந்தபோது அங்கு இதை பார்த்தேன் அப்போது நம்மூரிலும் இதை உற்பத்தி செய்யலாம் என எண்ணம் தோன்றியது. அதற்காக முதலில் வீட்டில் சிறிய அளவில் வளர்த்து பார்த்து விட்டு பின்னர் குஜராத் மாநிலத்தில் இருந்து செடிகள் வாங்கி இங்கு சாகுபடி தொடங்கினேன். தற்போது நாங்களே நர்சரி கார்டன் அமைத்து சாகுபடி செய்து வருகிறோம். இது ஒரு வறண்ட நில தாவரம் என்பதால் இதற்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. வாரம் இருமுறை தண்ணீர் விட்டாலே போதும்” என அவர் தெரிவித்தார்.

பராமரிப்பு குறைவு :

மேலும் அவர் கூறுகையில், “தொடக்கத்தில் இதற்கான முதலீடு என்பது சற்று அதிகமாக இருக்கும். இந்த தாவரம் வளர்வதற்கு ஏற்ப உயரமான கல் தூண்கள் அமைக்க வேண்டும் அதற்கான பொருள் செலவு சற்று அதிகம் தான். எனினும் அதன் பின்னர் வரும் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும். மேலும் இவற்றை தமிழ்நாடு மட்டுமின்றி மாலத்தீவு, இங்கிலாந்து முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

ட்ராகன் ஃப்ரூட் நன்மைகள் :

வெளிப்புறத்தில் முட்கள் போன்ற அமைப்புகொண்ட இந்த பழம் உட்பகுதியில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இதில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதை இதன் மூலம் தடுக்கலாம். டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது இதனால் இதை மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ட்ராகன்  ஃப்ரூட் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு 63802 92248 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar