ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் பார்வை மாற்று திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாடிய தன்னார்வ அமைப்பு

விருதுநகரில் பார்வை மாற்று திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாடிய தன்னார்வ அமைப்பு

X
விருதுநகர்

விருதுநகர் பொங்கல் கொண்டாட்டம்

Virudhunagar Pongal celebration | விருதுநகரில் பார்வை மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து ஏ.என்.டி அறக்கட்டளையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரை சேர்ந்த ஏஎன்டி அறக்கட்டளையினர் பொங்கலை முன்னிட்டு விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் கொண்டாடினர்.

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஏஎன்டி மருத்துவம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை விருதுநகரில் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொங்கலை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒய்ஸ்மென் விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளோடு பொங்கல் கொண்டாட முடிவு செய்த ஏஎன்டி அமைப்பினர் பொங்கலுக்கு முந்தைய நாள் மாலையில் விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதனை அடுத்து பொங்கலன்று விருதுநகர் புல்லலக்கோட்டையில் உள்ள நியு லைஃப் ஹோம்மில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய விருந்து ஏஎன்டி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

விருதுநகரில் மாணவர்களுக்கு ஒருநாள் விவசாயப் பயிற்சி- மக்கள் பாதை அமைப்பின் அசத்தல் முயற்சி

இதுகுறித்து பேசிய ஏஎன்டி தலைவர் ஜெயராஜ சேகர், 'பொங்கல், தீபாவளி போன்ற நல்ல நாட்களில் இது போன்ற ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கு வந்து நேரம் செலவிட்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இதை தொடர்ச்சியாக செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar