ஹோம் /விருதுநகர் /

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் நடைபெற்ற பாரம்பரிய மணல் மேட்டு திருவிழா - திரளான மக்கள் பங்கேற்பு

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் நடைபெற்ற பாரம்பரிய மணல் மேட்டு திருவிழா - திரளான மக்கள் பங்கேற்பு

X
மணல்மேட்டில்

மணல்மேட்டில் கூடிய மக்கள்

Virudhunagar | சாத்தூர் மணல்மேட்டு திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sattur, India

சாத்தூரில் நடைபெற்ற மணல்மேட்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மணல் மேட்டில் அமர்ந்து தங்கள் பொழுதைக் கழித்துமகிழ்ந்தனர்.

மணல்மேட்டு திருவிழா:

காணும் பொங்கலை முன்னிட்டு சாத்தூர்வைப்பாற்றங்கரையில் மணல் மேட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான படந்தால், வெங்கடாசலபுரம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒன்றாக வந்து கலந்து கொண்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மணல் மேட்டில் குவிந்த மக்கள்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் அன்று மாலை 1 மணி முதலே மணல் மேட்டில் வந்து அமர தொடங்கும் மக்கள் மாலை 6 மணி வரை மணல் மேட்டில் ஒன்றாக பேசி மகிழ்வதையும், கொண்டு வந்த உணவை பகிர்ந்துண்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மணல் மேட்டில் குவிந்த மக்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக வந்து வைப்பாற்றின் மணல் மேடுகளில் வந்து அமர்வதால் தான் மணல் மேட்டு திருவிழா என பெயர் பெற்ற இத்திருவிழா தற்போது ஆற்றிலிருக்கும் மணல் மேடுகள் காணமல் போய் விட்டதால் அதன் சிறப்பை இழந்து வருவதாக கூறப்படுகிறது. மக்கள் முன்பு கட்டு சோறு கட்டி கொண்டு வந்து நிலவின் வெளிச்சத்தில் பாய் விரித்து ஒன்றாகஉண்டு மகிழ்ந்த காலம் எல்லாம் போய் இன்று வெளியில் விற்கும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட தொடங்கி விட்டதாலும் மணல் மேட்டு திருவிழாவின் சிறப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

காணும் பொங்கல் ஏன் கொண்டாடுறோம்? விருதுநகர் மக்கள் அளித்த சுவாரஸ்ய பதில்கள்!

மாண்பை காக்க வேண்டும்:

முன்பு போல் இல்லை என்றாலும் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஏதோ சிறிது நேரம் குடும்பத்துடன் வந்து நேரம் செலவிட ஏதுவாக இன்றும் பாரம்பரிய மணல் மேட்டு திருவிழா நடப்பதே பெரிதாக உள்ளது. இந்த மாண்பு மறைந்து விடாமல் காக்க வேண்டும் என்கின்றனர் சாத்தூர் பகுதி மக்கள்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar