ஹோம் /விருதுநகர் /

மாநில அளவிலான கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்று விருதுநகர் மாணவன் அசத்தல்..!

மாநில அளவிலான கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்று விருதுநகர் மாணவன் அசத்தல்..!

X
கலைத்திருவிழாவில்

கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விருதுநகர் மாணவன்

Virudhunagar School Student Topper in Arts Competition | மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் தனிநபர் பறை இசைத்தல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் விருதுநகர் மாணவர் அய்யாதுரை பாண்டி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் தனிநபர் பறை இசைத்தல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் விருதுநகர் மாணவர் அய்யாதுரை பாண்டி.

அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிகொண்டு வரும் விதமாக அரசு பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த மாதம் நடத்தப்பட்டது.

நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த கலைத்திருவிழாவில் தனிநபர் பறை இசைத்தல் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார் மாணவர் அய்யாதுரை பாண்டி.

விருதுநகர் மாவட்டம் முத்தால்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் அய்யாதுரை பாண்டி, சிறுவயது முதலே பறை இசையின் ஈர்க்கப்பட்டு பறை கற்றுக்கொண்டு பறை அடித்து அசத்தி வருகிறார். சிறுவயது முதலே கற்றுக்கொண்ட கலையை ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களோடு சரியாக பயன்படுத்தி கொண்ட இவர் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அய்யாதுரை பாண்டி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்று பின் மாநில அளவில் சென்ற போது முதலில் தயக்கமாக இருந்ததாகவும், ஆனால் இங்கும் முதலிடம் பெற வேண்டும் என உறுதி கொண்டு தனது கலைத்திறமையை நிரூபித்து வெற்றி பெற்றதாக கூறி , இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இசை கல்லூரியில் சேர வேண்டும்:

தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர் பள்ளி கல்விக்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்து பறை இசை பற்றி இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவதே தனது ஆசை என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய முத்தால்நாயக்கன்பட்டி பள்ளி தலைமையாசிரியர் தங்கள் பள்ளி மாணவன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்களின் தனித்திறன் களை வெளிக்கொணர பல்வேறு முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் இன்னும் நிறைய திறமையான மாணவர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Local News, School student, Tamil News, Virudhunagar