முகப்பு /விருதுநகர் /

ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது கண் அசராமல் இருக்க மாணவரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!...

ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது கண் அசராமல் இருக்க மாணவரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!...

X
மாணவரின்

மாணவரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

Virudhunagar News | ஓட்டுநர்கள் கண் அசராமல் இருக்க விருதுநகர் பாலிடெக்னிக் மாணவர் வடிவமைத்த சென்சார் கண்ணாடி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

இரவு நேரத்தில் வாகனங்களைஓட்டும்போது ஓட்டுநர்கள் கண் அசருவதால் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் ஓட்டுநர்கள் தூங்குவதை தவிர்க்கும் வகையில் சென்சார் பொருத்தப்பட்ட புதிய வகை கண்ணாடியை வடிவமைத்துள்ளார் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் வெங்கடேஷ்.

ஏப்ரல் 8ம் தேதி விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இதில் பாலிடெக்னிக் மாணவர்கள் பலர் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்த நிலையில், ஓட்டுநர்கள் தூங்குவதை தவிர்க்க வடிவமைக்கப்பட்ட கண்ணாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இக்கண்ணாடியை டெல்லியில் நடந்த கண்காட்சியில் காட்சி படுத்திய பின்னர் தற்போது இங்கும் காட்சிக்கு வைத்திருப்பதாக இந்த கண்ணாடியை வடிவமைத்த மாணவர்வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்கள் மற்றும் இரவு நேர பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தில் கண் அசராமல் இருக்க அவர்களை இந்த கண்ணாடியை பயன்படுத்தி எச்சரிக்கையாக இருக்க முடியும் என்றார் வெங்கடேஷ்.

கண்ணாடி செயல்படும் விதம்:

சென்சார் பொருத்தப்பட்ட இந்த கண்ணாடி நமது கண் இமைகள் மூடிய இரண்டு விநாடிகளில் கழித்து சத்தம் எழுப்பும். இதன் மூலம் கண் மூடிய ஓட்டுநர்கள் சுதாரித்துக் கொண்டு விழித்து கொள்வார். கண்விழித்த அடுத்த இரண்டு விநாடிகள் கழித்து சத்தம் தானாகவே நின்றுவிடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இது குறிப்பாக ஓட்டுநர்கள் மற்றும் இரவுநேர பணி செய்ய கூடிய வாட்ச்மென் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய மாணவர், இனிவரும் காலங்களில் இக்கண்ணாடியை வாகனத்துடன் இணைத்து முதலில் அலாரம் அடித்த பின்னர் வாகனத்தின் இன்ஜின் தானாக நின்றுவிடும் வகைகள் வடிவமைக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar