Home /virudhunagar /

மரங்கள் நடுவதில் தீவிரம்; விருதுநகரை சோலையாக்க முயற்சிக்கும் தன்னார்வலர்கள் குழு

மரங்கள் நடுவதில் தீவிரம்; விருதுநகரை சோலையாக்க முயற்சிக்கும் தன்னார்வலர்கள் குழு

விருதுநகர்

விருதுநகர் தன்னார்வலர்கள்

விருதுநகரில் ஆலமரம் என்ற அமைப்பினர் மரம் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
மாறி வரும் இயற்கைச் சூழலால் இந்த உலகமே வெப்பமயமாதலை எதிர் கொண்டு வரும் நிலையில் கந்தக பூமியான விருதுநகரில் மரங்களை நட்டு இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் ஆலமரம் அமைப்பினர்.

முன்னொரு காலத்தில் இயற்கை மிகுந்த சோலை வனமாக இருந்த இந்த பூமி இன்று பாலைவனமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மரங்கள் வெட்டப்படுவது தான், மரம் வளர்ப்பு பற்றி என்ன தான் பக்கம் பக்கமாக பேசினாலும் மரம் வளர்க்க போதுமான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.

சிலர் பெயருக்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தாலும் அதன் பின்னர் அதை கவனிப்பதே இல்லை. இந்த நிலையில் இந்த ஆலமரம் அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு மட்டும் இல்லாமல் அவற்றை பராமரித்து வருகின்றனர்.

மரம் நடும் பணியில் குழுவினர்


பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என 200 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. மேலும் விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராமத்தில் சிறிய அளவில் மியாவாக்கி காட்டை அமைத்துள்ளனர்.

நட்டுவைக்கப்பட்டுள்ள மரம்


இவர்களின் பணியில் 82 வாரத்தில் வரலொட்டி கிராம கண்மாய் பகுதியில் 500 பனை விதைகளை நட்டனர். இதுகுறித்து பேசிய ஆலமர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், ‘இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ள நிலையில் இந்த வாரம் 500 பனை மர விதைகளை நட முடிவு செய்து நட்டு வருகிறோம். அடுத்த வாரம் 500 பனை மர விதைகளை நட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்களின் பங்களிப்பு கிடைக்கும் பட்சத்தில் இதை விரிவுபடுத்த முடியும் என்று தெரிவித்தார். இவர்களின் இப்பணி மகத்தானது. இயற்கை பாதுகாப்பில் இனைந்திட 86100-58484 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி