Home /virudhunagar /

விருதுநகர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - உங்கள் ஊரிலேயே உணவு பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளலாம்

விருதுநகர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - உங்கள் ஊரிலேயே உணவு பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் நடமாடும் ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் வலம் வர இருக்கிறது உங்கள் ஊருக்கு எப்போது வரும் என்று அறிந்து பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    உணவு பொருட்கள் தரம், கலப்படம் குறித்த ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறைசார்பில் விருதுநகரில் நடமாடும் ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஆய்வகம் செப்டம்பர் 28 வரை விருதுநகர் மாவட்டம் முழுவதும் வலம் வர இருக்கிறது.

    இந்த நடமாடும் ஆய்வகத்தில் கடைகள், கிட்டங்கிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள் உடனடியாக பரிசோதனை செய்து உடன் முடிவை அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த நடமாடும் ஆய்வக வாகனத்தை விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நடமாடும் ஆய்வகம் செப்டம்பர் 7 (இன்று) விருதுநகர் ஆர்.ஆர்.நகர், செப்டம்பர் 8 சாத்தூர் நகராட்சி, செப்டம்பர் 12 நரிக்குடி, செப்டம்பர் 13 அருப்புக்கோட்டை நகராட்சி, செப்டம்பர் 14 காரியாபட்டி பேரூராட்சி, செப்டம்பர் 19 சிவகாசி மாநகராட்சி ஆகிய இடங்களுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, செப்டம்பர் 20 திருத்தங்கல், செப்டம்பர் 21 சிவகாசி ஒன்றிய பகுதி, செப்டம்பர் 26 திருவில்லிபுத்தூர் நகராட்சி, செப்டம்பர் 27 ராஜபாளையம் நகராட்சி, செப்டம்பர் 28 தளவாய்புரம் நகராட்சி பகுதிகளில் ஆய்வுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பொருட்களின் தரத்தை நடமாடும் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி