முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் ஆட்டோ ஓட்டி கலக்கிவரும் பெண்... வெற்றிப் புன்னகையோடு வலம்வரும் பெண் சாரதி!

விருதுநகரில் ஆட்டோ ஓட்டி கலக்கிவரும் பெண்... வெற்றிப் புன்னகையோடு வலம்வரும் பெண் சாரதி!

X
பெண்

பெண் ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணவேணி

Virudhunagar District | மோட்டார் வாகனங்களின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஆட்டோ ஓட்டி உழைக்கும் விருதுநகரின் பெண் ஆட்டோ ஓட்டுனராக கிருஷ்ணவேணி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.திருமணமான இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கணவர் லோடுமேன் வேலை பார்த்து வரும் நிலையில், சிறுவயதில் இருந்தே தனக்கு மோட்டார் வாகனங்களின் மீதிருந்த ஆர்வம் காரணமாக ஆண்கள் ஓட்டும் கியர் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட கற்றுக்கொண்டார். பின்னர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியோடு ஆட்டோவை ஓட்ட கற்றுக்கொண்டு, தற்போது சொந்தமாக ஆட்டோ வைத்து விருதுநகரில் பெண் ஆட்டோ ஓட்டுனராக வலம் வருகிறார்.

இது பற்றி பேசிய கிருஷ்ணவேணி, தான் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட பின்னர், தனது கணவர் பக்கபலமாக இருந்து தனக்கு இந்த ஆட்டோவை வாங்கி கொடுத்து தனது ஆசையை நிறைவேற்றியதாகவும், தனது குடும்பத்தினரும் தன் மீது நம்பிக்கை வைத்து இதை செய்ய அனுமதித்தாகவும் தெரிவித்தார்.

விருதுநகரை பொறுத்த வரை பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்னும் போதிய அளவில்உருவாகவில்லை.தனிப் பெண்ணாக இந்த ஊரில் முதல் முதலாக ஆட்டோ ஓட்டிய போது அனைவரும் பாராட்டினர். உற்சாகமூட்டினர் அந்த ஒரு ஊக்கம் தான் என்னை இன்று வரை ஓட வைக்கிறது என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுவாகவே மோட்டார் வானத்துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவுதான். இன்று சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் வலம் வந்தாலும் விருதுநகரை பொருத்தவரை அது இயலாத ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில், அதுவும் சாத்தியம்தான் என ஜெயித்து காட்டியுள்ளார் இந்த கிருஷ்ணவேணி.

First published:

Tags: Local News, Virudhunagar