ஹோம் /விருதுநகர் /

சதுரகிரி யாத்திரை - சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி யாத்திரை - சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம்

விருதுநகர்

விருதுநகர்

A Crowd of Devotees Come To Visit The Sundara Mahalinga During Chaturagiri Yatra | சதுரகிரியில் தற்போது, நவராத்திரி உற்சவம் துவங்கியுள்ளது. இதனால் பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படுகிறது.  மேலும், மகாளய அமாவசை அன்றும் பக்தர்கள் அதிகளவில் சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

சதுரகிரியில் தற்போது, நவராத்திரி உற்சவம் துவங்கியுள்ளது. இதனால் பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படுகிறது. மேலும், மகாளய அமாவாசை அன்றும் பக்தர்கள் அதிகளவில் சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க ; மகாளய அமாவாசையில் சதுரகிரியில் வழிபடுவது ஏன் முக்கியம்?

சதுரகிரியில் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தொடர்ச்சியாக இன்று பிரதோஷம், மகாளய அமாவாசை, நாவராத்திரி என திருவிழா 13 நாட்கள் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதோஷம், மகாளய அமாவாசை, நவராத்திரி திருவிழாவையொட்டி சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி பக்தர்கள் தரிசனம் செய்ய அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். மழைபெய்யும் நாட்களில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

இதையும் படிங்க ; 100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

இந்நிலையில், புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு (வெள்ளிக்கிழமை) முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கடந்த வெள்ளிக் கிழமை முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில். சாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்து இருந்தனர். மேலும், சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar