முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் சதம் அடித்த வெயில்.. அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதி!

விருதுநகரில் சதம் அடித்த வெயில்.. அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதி!

விருதுநகரில் சதம் அடித்த வெயில்! அனல் காற்றில் பொதுமக்கள் அவதி 

விருதுநகரில் சதம் அடித்த வெயில்! அனல் காற்றில் பொதுமக்கள் அவதி 

Virudhunagar summer | விருதுநகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், நகரின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், நகரின் வெப்பநிலை 100டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாகவே வெயில் மனிதர்களின் பூமியாக கருதப்படும் விருதுநகரில் வழக்கத்தை விட வெயில் அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 13.04.2023 மற்றும் 14.04.2023 ஆகிய தேதிகளில் மட்டும் நகர் பகுதியில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. பிற்பகல் மூன்று மணி முதல் மாலை 5 வரை நகர் பகுதியில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மதிய வேளையில் வீசி வரும் அனல் காற்றால் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில் விருதுநகர் மக்கள் மழை பெய்தால் தான் தப்பிக்க இயலும் என்ற மனநிலையில் உள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Summer, Virudhunagar