ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் முதல் முறையாக புத்தக கண்காட்சி... எப்போது நடக்கிறது தெரியுமா?

விருதுநகரில் முதல் முறையாக புத்தக கண்காட்சி... எப்போது நடக்கிறது தெரியுமா?

விருதுநகரில் முதல் முறையாக புத்தக கண்காட்சி

விருதுநகரில் முதல் முறையாக புத்தக கண்காட்சி

virudhungar news : இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக வரும் 17ம் தேதி முதல்முறையாக புத்தக கண்காட்சி நடப்பதாக மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விருதுநகரில் முதல்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வருகிறது 'ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட்' அங்காடி - என்ன விற்பனை தெரியுமா?

இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு தனித்தனியாக 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த புத்தக திருவிழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar