முகப்பு /விருதுநகர் /

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்- 74 வயது முதியவரின் அசாத்திய முயற்சி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்- 74 வயது முதியவரின் அசாத்திய முயற்சி

X
சைக்கிள்

சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்

Virudhunagar | இந்திய கலாச்சாரத்திற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்து வரும் டெல்லியை சேர்ந்த 74 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியர் விருதுநகர் வந்தடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை டெல்லியை சேர்ந்த 74 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் கிரண் சேத். 74 வயதான இவர் டெல்லி ஐஐடியில் பேராசிரியராகப் 45 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்பு ஓய்வு பெற்ற பின்னர், டெல்லியில் உள்ள தனியார் அமைப்பில் சேர்ந்து மாணவர்களுக்கு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்திய மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இமயம் முதல் குமரி வரை சைக்கிள் பயணம் செய்து வருகிறார்.

சைக்கிள் பயணம் செய்யும் பேராசிரியர்

இதற்காக கடந்த ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீரில் உள்ள ஶ்ரீ நகரில் தனது பயணத்தை தொடங்கிய இவர், 14 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் கடந்து பிப்ரவரி 14 ம் தேதி காலை விருதுநகர் வந்தடைந்தார். இன்றைய இளைஞர்களிடையே பண்பட்ட இந்திய கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது அதற்காக தான் தற்போது இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சைக்கிள் பயணத்தினால் உண்டாகும் நன்மை, உயர்ந்த சிந்தனை மற்றும் எளிய வாழ்க்கை முறை, இந்திய கலாச்சாரத்தின் பெருமை பற்றிய விழிப்புணர்வு என மொத்தம் மூன்று காரணங்களுக்காக பயணம் செய்து வருவதாக தெரிவித்தவர் வரும் பிப்ரவரி 19 ம் தேதி கன்னியாகுமரி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

தேனியில் தொடங்கிய குடற்புழு நீக்க முகாம்.. பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் விநியோகம்!

மேலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் தொன்மையானது மற்றும் சிறப்புடையது. இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக நம் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar