ஹோம் /விருதுநகர் /

90s கிட்ஸ்களின் ஃபேவரைட்.. 30 ஆண்டு அனுபவத்தை சொல்லும் சிவகாசி ஜவ்வு மிட்டாய் வியாபாரி..

90s கிட்ஸ்களின் ஃபேவரைட்.. 30 ஆண்டு அனுபவத்தை சொல்லும் சிவகாசி ஜவ்வு மிட்டாய் வியாபாரி..

X
சிவகாசி

சிவகாசி

90s Famous Javvu Mittai : 90s கிட்ஸ்களின் விருப்பமான மிட்டாய்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதில் மிக முக்கியமான விருப்ப மிட்டாயான ஜவ்வு மிட்டாய் எனப்படும் பம்பாய் மிட்டாய் வேகமாக மறைந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

90s கிட்ஸ்களின் விருப்பமான  ஜவ்வு மிட்டாய் வேகமாக மறைந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜவ்வு மிட்டாய் தான் அன்றைய கால குழந்தைகளின் விருப்பமான மிட்டாய். பார்ப்பதற்கு பல வண்ணங்களில் வரிவரியாக நீளும் தன்மையுடைய இந்த மிட்டாயின் சுவைக்கு ஈடு இனை கிடையாது. இந்த மிட்டாயை மொத்தமாக மூங்கிலில் எடுத்துக்கொண்டு அதன் மேல் பல வண்ணங்களில் ஆடையணிந்த பொம்மைகளை வைத்து வியாபாரிகள் தெருக்களில் விற்பனை செய்ய வருவர்.

கவரும் சத்தங்கள் :

அந்த காலத்தில் குழந்தைகளை கவர வியாபாரிகள் எப்போதும் ஒரு வித ஒலி எழுப்பிய படி வருவர். உதாரணமாக ஐஸ் விற்பவர்கள் மணியடித்தபடி வருவர். அதுபோல இந்த ஜவ்வு மிட்டாய் மேல் வைக்கப்பட்டிருக்கும் பொம்மையின் கையில் சிங்கிகள் பொருத்தப்பட்டு கையில் கயிற்றின் மூலம் கட்டப்பட்டிருக்கும். கயிற்றை இழுத்தால் பொம்மை கைகளை தட்டி ஜல் ஜல் ஒலி எழுப்பும்.

90s - களை கவர்ந்தது எப்படி?

இந்த ஜவ்வு மிட்டாயை பிடித்து இழுத்து வாட்ச், மோதிரம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் செய்து கொடுப்பர் வியாபாரிகள். அதனாலேயே அன்றைய 90s குழந்தைகள் இந்த ஜவ்வு மிட்டாயை விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.

மீசை இலவசம் :

எந்த வடிவத்தில் ஜவ்வு மிட்டாய் வாங்கினாலும் அவர்களுக்கு மீசை இலவசம். ஜவ்வு மிட்டாயை மீசை போல் முறுக்கி விட்டு குழந்தைகளின் முகத்தில் ஒட்டி விடுவர். அதை வைத்துக்கொண்டு, “எனக்கு மீசை வந்திருச்சு” என வந்ததெல்லாம் ஒரு காலம் என்று நினைப்பர் இந்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டவர்கள்.

இன்று நவீன சாக்லேட்கள் எளிதில் கிடைப்பதால் இந்த ஜவ்வு மிட்டாய்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணமல் போய் வரும் நிலையில், ஜவ்வு மிட்டாய் விற்போறும் குறைந்து வருகின்றனர். சிவகாசியில் 30 ஆண்டுகளாக ஜவ்வு மிட்டாய் விற்பனை செய்து வரும் சுடலை தாத்தா, முன்பு குழந்தையாக இருந்து தன்னிடம் ஜவ்வு மிட்டாய் வாங்கி சாப்பிட்டவர்கள் இன்று அவர்களின் குழந்தைக்கு இதன் அருமையை சொல்லி வாங்கி தருகின்றனர்.

இதையும் படிங்க : துணிவு அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த புதுச்சேரி ரசிகர்கள்..!

முன்பு போல் இல்லை என்றாலும் ஓரளவு வரவேற்பு இருக்க தான் செய்கிறது. ஆனாலும வருமானம் இதில் போதிய அளவுக்கு வருவதில்லை. அதனால் தான் பெரும்பாலான வியாபாரிகள் இந்த தொழிலை விட்டு விட்டதாக கூறினார்.

இனியும் இந்த கைத்தொழில் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை ஏனென்றால் எங்களின் காலத்திற்கு இதை எடுத்து செய்ய ஆள் இல்லை. ஏதோ இருக்கும் வரை இதை விற்கலாம் என இதை செய்து விற்று வருவதாக கூறியவர் மீண்டும் கூட்டத்தில் ஜவ்வு மிட்டாய் விற்க சென்றார்.

First published:

Tags: Local News, Virudhunagar