ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் அருகே அழிந்து வரும் பாண்டியர் கால சிவன் கோயில்.. மண்ணில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம்..

விருதுநகர் அருகே அழிந்து வரும் பாண்டியர் கால சிவன் கோயில்.. மண்ணில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம்..

பாண்டியர்

பாண்டியர் கால சிவன் கோயில்..

Virudhunagar News | விருதுநகர் அடுத்த பாலவநத்தம் அருகே உள்ள செந்நெல்குடி என்னும் அழகிய கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சிவன் கோவில் சிதலமடைந்து வருகிறது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அழியும் நிலையில் உள்ளது. இக்கோவிலை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அடுத்த பாலவநத்தம் அருகே உள்ள செந்நெல்குடி என்னும் அழகிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து பொட்டல்பட்டி செல்லும் வழியில் வயல்வெளிக்கு நடுவே முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது இந்த பாண்டியர் கால சிவன் கோயில்.

மொத்தமாக கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் என மூன்று அமைப்புகளை கொண்ட இந்த கோவில் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், கற்களை அடுக்கி வைத்து கட்டப்பட்ட கற்றளி அமைப்புடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.கோவிலின் கருவறை முற்றிலும் இடிந்து போய் காணப்படும் நிலையில் உள்ளே இருந்த மூலவர் சிலையும் காணாமல் போய் உள்ளது.

இதனால் தற்போது இங்கு பூஜைகள் நடப்பது இல்லை (கோவிலுக்கு வெளியே ஒரு விநாயகர் சிலை மட்டும் வயல்வெளியில் காணப்படுகிறது).

மேலும் படிக்க: திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

அரத்தமண்டபம் மற்றும் முன் மண்டபம் சிதைந்து வரும் நிலையில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன.முன்மண்டப தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன மற்றும் கோவிலின் சுற்றுச்சுவர்களிலில் அழகிய வேலைப்பாடுகளை காண முடிகிறது.

சிதலமடைந்து காணப்படும் சிவன் கோவில்

பாண்டியர் கால கோவில்:

இந்த கோவில் இடைக்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என்று கூறப்படும் நிலையில், அவை மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னனுடைய ஆட்சி காலத்தில் எழுதப்பட்டுள்ளன.

அழிந்து வரும் சிவன் கோவில்

தொல்லியல் மேடு:

இந்த கோவிலை பற்றி அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் கேட்ட போது, அவர்கள் இந்த கோவில் நீண்ட காலமாக கேட்பாரற்று இருப்பதாகவும், இந்த பகுதியை விவசாயம் செய்ய உழும் போது நிறைய மண்பானை ஓடுகள் கிடைக்கின்றன அதனால் இந்த பகுதியில் முன்னொரு காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்க கூடும் என்று கூறி வயலில் கிடக்கும் மண்பானை ஓடுகளை எடுத்து காட்டினர். அந்த வயலின் மேற்பரப்பில் அதைப் போன்ற நிறைய பானை ஓடுகள் காணப்பட்டன.

மேலும் படிக்க கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

பொதுவாக பழங்கால மக்கள் ஆற்றுப்படுகையில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கேயும் சிறிது தொலைவில் கெளசிகா நதி பாய்கிறது.

விநாயகர் சிற்பம்

பழமையான சிவன் கோவில் மற்றும் அருகில் கிடைக்கும் தொல்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பார்க்கும் போது இந்த பகுதியிலும் ஓர் மக்கள் நாகரீகம் இருந்திருக்க கூடும் என யூகிக்க முடிகிறது.இதை முறையாக ஆய்வு செய்தால் இது தொடர்பான உண்மைகள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதை முழுமையாக உறுதி செய்ய தொல்லியல் துறையினரால் மட்டுமே இயலும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் மூத்தவர்கள் பாண்டியர்கள் ஆனால் சோழர்களின் கட்டிடக்கலை பற்றி பேசும் நாம் பாண்டியர் பற்றி பேசுவதில்லை.காரணம் நிறைய பாண்டியர் கால கோவில்கள் காலத்தால் அழிக்கப்பட்டு விட்டன. சில அழிந்து வருகின்றன. இந்த நிலையில் எஞ்சியுள்ள இது போன்ற கோவில்களையாவது காக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar