முகப்பு /விருதுநகர் /

பால் உற்பத்தியில் மாதம் ரூ. 70,000 லாபம்.. மாடு வளர்ப்பில் அசத்தி வரும் விருதுநகர் பட்டதாரி!

பால் உற்பத்தியில் மாதம் ரூ. 70,000 லாபம்.. மாடு வளர்ப்பில் அசத்தி வரும் விருதுநகர் பட்டதாரி!

X
மாடு

மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விருதுநகர் பட்டதாரி

Virudhunagar News | விருதுநகரை சேர்ந்த ராமலிங்க குரு, மாட்டு பண்ணை அமைத்து தானே மாடுகளை பராமரித்து வருகிறார்.

  • Last Updated :
  • Virudhunagar, India

படித்த படிப்பிற்கேற்ற வேலைக்கு தான் செல்வேன் என்று பலர் இருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தபட்டதாரி இளைஞர் ஒருவர் பால் பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

நாட்டில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்றசெய்தி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் சிறு தொழில்கள், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை என்ற செய்தியும் சமீபத்திய காலமாக வருகிறது. இரண்டும் முரணாக இருந்ததாலும் அவைஉண்மை தான்.

படித்த வேலைக்கு தான் செல்வேன் என்ற மனநிலை தான் இதற்கு காரணம். ஒயிட் காலர் வேலைகளுக்கு தான் செல்வேன் என்று அடம்பிடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் மாட்டு பண்ணை அமைத்து தானே மாடுகளை பராமரித்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த ராமலிங்க குரு.

முதுநிலை பொறியியல் பட்டாதாரியான இவர் படித்து முடித்துவிட்டு சில காலம் சென்னையில் பணிபுரிந்து வந்ததாகவும், பின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று காரணத்தால் வீட்டுக்கு வந்த இந்த வேலையை செய்ய தொடங்கியதாகவும், வேலையை காட்டிலும் இதில் நல்ல லாபம் இருந்ததால் இப்போது இதிலே பண்ணை அமைத்து மாதம் 70,000 வரை வருமானம் ஈட்டி வருவதாக தெரிவித்தார்.

மாடு வளர்ப்பை பொருத்த வரை வெளியில் தீவனம் பயிர்களை வாங்கி போடுவதை விட, நாமே தீவன பயிர்களை விளைவித்து அதை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்ட முடியும் என்று கூறிய அவர், “என்ன படிச்சுட்டு இந்த வேலைய பாக்குறன்னு வீட்லயே கேட்டாங்க ஆனா எனக்கு பெரிய நிறுவனத்துல வேலைக்காரனா இருப்பத விட, இங்கு பண்ணையில முதலாளியா இருக்கது புடிச்சிருந்தது. அதனால யார் என்ன சொன்னாலும் அத பெருசா எடுத்துக்க மாட்டேன்”என்று சிரித்தபடி பேசிவிட்டு போய் மாடுகளுக்கு தண்ணீர் காட்ட தொடங்கினார்.

ALSO READ | விருதுநகர் மக்களே உஷார்.. அருப்புக்கோட்டைக்கு வரும் ரயில் நேரம் மாற்றியமைப்பு..!

பெரிய நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் இருந்தாலும், அங்கு நாம் வேலைக்காரன் தான். முதலாளியாக இருக்க வேண்டுமா அல்லது தொழிலாளியாக இருக்க வேண்டுமா என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Business, Local News, Virudhunagar