முகப்பு /விருதுநகர் /

சிவகாசிக்கு வருகிறது 5ஜி சேவை.. நெட்டிசன்களுக்கு கலக்கல் அப்டேட்..

சிவகாசிக்கு வருகிறது 5ஜி சேவை.. நெட்டிசன்களுக்கு கலக்கல் அப்டேட்..

மாதிரி படம்

மாதிரி படம்

5G service | ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 5 ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 5ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 2022ம் ஆண்டு டெல்லியில் முதன் முதலாக 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் 5G சேவைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் 5G சேவைகள் தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் அடுத்தகட்டமாக 34 நகரங்களில் 5G சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்பட திருச்செங்கோடு, விழுப்புரம், ஆம்பூர், சிதம்பரம், ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை போன்ற 8 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : மதுரையின் முக்கிய பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

மேலும், குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் தொழில் நகரான சிவகாசிக்கு இந்த 5G சேவைகள் தொடங்க இருப்பதாக வெளியான அறிவிப்பு அப்பகுதி நெட்டிஷன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar