முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டம் நாட்டிலேயே 3வது இடம்... எதில் தெரியுமா?

விருதுநகர் மாவட்டம் நாட்டிலேயே 3வது இடம்... எதில் தெரியுமா?

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம்

Virudhunagar District | முன்னேற விழையும் மாவட்டங்கள் பட்டியலில் சென்ற முறை 14ம் இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாட்டில் 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தமிழகத்திலிருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பின்தங்கிய மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.

முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்’ என்ற Dashboard-ல் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியிட்டு வருகிறது.

அதன்படி முன்னேற விழையும் மாவட்டங்கள் பட்டியலில் சென்ற முறை 14ம் இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

மேலும் படிக்க : சோழர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிய மன்னன் யார் தெரியுமா? 

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால், சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதுகள் 2022-ல் வழங்கப்பட்டன. இதில் முன்னேற விழையும் மாவட்டப் பிரிவில், விருதுநகர் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar